சுவையான..ஈஸியான ப்ரெட் பீட்ஸா..
சுவையான.. ஈஸியான.. குழந்தைகளுக்கு பிடித்தமான ப்ரெட் பீட்ஸா எப்படி செய்றது னு பார்ப்போம்..
சமைக்க தேவையானவை
ப்ரெட் - 4 ஸ்லைஸ்கேரட் - ஒன்றுபீட்ஸா சாஸ் (அ) டொமேட்டோ கெட்சப் - தேவையான அளவுகுடைமிளகாய் - ஒன்றுவெண்ணெய் - தேவையான அளவுவெங்காயம் - ஒன்றுசீஸ் - தேவையான அளவுஉணவு செய்முறை : ப்ரெட் பீட்ஸா
ஸ்டெப் 1.
முதலில் பேனில் வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் ப்ரெட் ஸ்லைஸை போட்டு பிரட்டி எடுக்கவேண்டும் .பின்பு ப்ரெட் ஸ்லைஸில் சாஸை தடவவும்.
ஸ்டெப் 2.
பிறகு துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவவேண்டும் . அதன் மேல் சிகப்பு மற்றும் பச்சை குடைமிளகாயை பொடியாக நறுக்கி தூவவேண்டும் .
ஸ்டெப் 3.
பின்பு நாண்ஸ்டிக் பேனில் ப்ரெட்டை வைத்து அதன் மேல் சீஸ் தூவவேண்டும் .பிறகு அடுப்பின் தணலை மிதமாக வைத்து மூடி சீஸ் உருகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.