பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு பாக்.பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து!

பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு பாகிஸ் தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவவேண்டும் என மோடியிடம் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 2- வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ள மோடிக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் இன்று தொலைபேசி மூலம் மோடியை தொடர்பு கொண்ட இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு நாடுகளிடையே ஒற்றுமையும், அமைதியும் நிலவ வேண்டும் என மோடியிடம் இம்ரான் கான் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே வரும் 30-ந் தேதி நடைபெற உள்ள பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கும் அழைப்பு விட மத்திய வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கை அதிபர் மைத்ரி பால ஸ்ரீ ரத்னா ஆகியோருக்கும் அழைப்பு விட இந்தியா முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

More News >>