22 வருடங்கள் கழித்து மீண்டும் பள்ளி மாணவனான ஜெயம் ரவி!

ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள கோமாளி படத்தின் கடைசி மற்றும் 9வது லுக்கும் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 9 கெட்டப் லுக்குகளையும் கடந்த 9 நாட்களாக ஒவ்வொரு பிரபலங்கள் மூலமாக படக்குழுவினர் வெளியிட்டு வந்தனர்.

மன நோயாளி, ராக்ஸ்டார், ஆதிவாசி, சுதந்திர போராளி, ராஜா, ஆதாம் ஏவாள், செக்யூரிட்டி மற்றும் பள்ளி மாணவன் என ஒவ்வொரு லுக்கும் ஒவ்வொரு காலக்கட்டத்தை சேர்ந்தவையாக இருக்கிறது.

இந்த படம் டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதா? அல்லது ஹாலிவுட் படமான நைட் அட் தி மியூசியம் படத்தின் தழுவலா? என்பது படம் வெளியானதும் தெரிந்துவிடும்.

நேற்று மாலை படத்தின் கடைசி மற்றும் 9வது லுக்கை ஜெயம் ரவியும் அண்ணனும் இயக்குநருமான மோகன் ராஜா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார்.

ஜெயம் படத்திற்கு முன்பான ரவியை காணுங்கள் என்று அதில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கோமாளி படத்தின் 9வது லுக்கை ஷேர் செய்த ஜெயம் ரவி, 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளி மாணவனாக என குறும்புடன் பதிவிட்டுள்ளார். படத்தின் சிங்கிள் டிராக் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

More News >>