பாகுபலி நாயகிக்கு என்ன ஆச்சு? குத்தாட்ட நடிகையாக மாறி வரும் தமன்னா!

பாகுபலி படத்தில் நாயகியாக நடித்த தமன்னா, அந்த படத்திற்கு பின்னர் தனக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், பாகுபலி 2ம் பாகத்திலேயே, தமன்னாவுக்கு பெரிய ஸ்கோப் இல்லாமல், அனுஷ்காவுக்கு எல்லா புகழும் சென்றதால், கடும் அப்செட் ஆனார் தமன்னா.

அந்த படத்திற்கு பிறகு, தமிழில் ஸ்கெட்ச், கண்ணே கலைமானே போன்ற படங்களில் தமன்னா நடித்தார். ஆனால், இரண்டு படங்களும் தோல்வியைத் தழுவியதால், தமன்னாவின் முன்னணி நாயகி கனவு பலிக்காமலே இருந்து வருகிறது.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள தேவி 2 படத்தையே தமன்னா பெரிதும் நம்பியிருக்கிறார். இந்நிலையில், நடிகை நயன்தாரா நாயகியாக நடித்துள்ள தெலுங்கு படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி குத்தாட்டம் போட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

200 கோடி பட்ஜெட்டில் ராம்சரண் தயாரிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவி நாயகனாகவும் நயன்தாரா நாயகியாகவும் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, சுதிப் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக, யஷ் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட ஹிட் அடித்த கேஜிஎஃப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கும் தமன்னா குத்தாட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது. தேவி 2 படத்திலும், உள்ளாடை மட்டும் அணிந்து தமன்னா ஆடிய பாடலை தான் படக்குழு முதலில் வெளியிட்டது.

தொடர்ந்து இதுபோல, கவர்ச்சி நடனத்துக்கு மட்டுமே தமன்னா அழைக்கப்படுவது அவரது வளர்ச்சிக்கு எந்தளவு உதவியாய் இருக்கும் என்பது சந்தேகம் தான்.

More News >>