அமெரிக்காவில் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகும் என்ஜிகே!
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வரும் மே 31ம் தேதி என்ஜிகே திரைப்படம் வெளியாகிறது. ஆனால், அமெரிக்காவில் இந்த படம் ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் மே 30ம் தேதியே ப்ரீமியர் காட்சியாக வெளியாகிறது.
சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள அரசியல் படம் தான் என்ஜிகே. புதுப்பேட்டை படத்திற்கு பிறகு மீண்டும் அரசியல் சப்ஜெக்டை எடுத்து செல்வராகவன் இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் பல விஷயங்களை இந்த படத்தில் எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.
வரும் மே 31ம் தேதி இந்தியாவில் வெளியாகும் என்ஜிகே திரைப்படம் ஒரு நாள் முன்னதாக மே 30ம் தேதி அமெரிக்காவில் வெளியாகிறது. மேலும், அமெரிக்காவில் 150 திரையரங்குகளில் இந்த படம் வெளியாவதால், சூர்யாவுக்கு முதன்முறையாக அமெரிக்காவில் நல்ல ஓபனிங்கை இந்த படம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோலிவுட்டை தாண்டி டோலிவுட்டிலும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் சமீப காலமாக சூர்யாவின் படங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நல்ல வரவேற்பை பெற்று வருவது தான். மேலும், இந்த படத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருப்பதால், அவர்களுக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால், அங்கேயும் சூர்யா வசூல் வேட்டை செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.