ஏழுமலையானை தரிசித்தார் எடப்பாடி

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேசமயம், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் 9 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம், சட்டமன்றத்தில் அதிமுக பலம் 123 ஆக உயர்ந்து, பெரும்பான்மையை பெற்று விட்டது. இதனால், இனி அதிமுக ஆட்சிக்கு ஆபத்து இல்லை.இந்த நிலையில், ஆட்சி தப்பித்த நிம்மதியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஏழுமலையானை தரிசிக்கச் சென்றார். அவர் தனது குடும்பத்தினருடன் கார் மூலம் திருப்பதிக்கு நேற்றிரவு வந்து சேர்ந்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செவ்வாய் தோறும் அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவை நடைபெறும். இன்று காலையில் நடைபெற்ற அந்த சேவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்பு, கோயிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டம் அருகே சென்ற எடப்பாடி பழனிச்சாமி, அங்கு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டார். இதையடுத்து பேடி ஆஞ்சநேய சுவாமி கோவிலிலும் முதலமைச்சர் பழனிசாமி வழிபட்டார். தொடர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு சென்னை புறப்பட்டார்

More News >>