ஐபிஎல் மட்டுமில்ல உலகக்கோப்பையிலும் தொடரும் தோனியின் ருத்ரதாண்டவம்!

இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டம் இன்று கார்டிபில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் தோனி 113 ரன்களும், லோகேஷ் ராகுல் 108 ரன்களும் விளாசினர். இந்தியா 50 ஓவர் முடிவில் 359 ரன்கள் எடுத்தது.

உலகக் கோப்பை போட்டி வரும் மே 30ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான பயிற்சி ஆட்டங்கள் கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. இன்றைய பத்தாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலபரிட்சை நடத்தி வருகின்றன.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் துவக்க வீரர்களான ஷிகர் தவான் ஒரு ரன்னிலும், ரோகித் சர்மா 19 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். கேப்டன் விராத் கோலி பொறுப்புடன் விளையாடி வந்த நிலையில் 47 ரன்களில் அவரும் ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 2 ரன்களில் பெவிலியன் திரும்ப, இந்திய அணி 102 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையை அடைந்தது.

அப்போது கரம் கோர்த்த தோனி மற்றும் ராகுல் ஜோடி வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்களை ஓடவிட்டு சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரி மழையை கார்டிபில் பொழிய வைத்தனர்.

அதிரடியாக ஆடிய லோகேஷ் ராகுல் 99 பந்தில் 12 பவுண்டரி 4 சிக்ஸர்கள் என 108 ரன்கள் விளாசினார். ஐபிஎல் போட்டிகளில் நல்ல ஃபார்முக்கு வந்த தோனி, உலகக்கோப்பையின் இன்றைய வார்ம் அப் மேட்சில் வெறும் 78 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் என 113 ரன்கள் எடுத்து ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார்.

இதனால், 50வது ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளது. 360 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்கதேச அணி ஆடி வருகிறது.

Also Watch...

More News >>