சுவையான வெங்காய குழம்பு ரெசிபி
சுவையான வெங்காய குழம்பு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 1
பசலை கீரை - 250 கிராம்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தனியா தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
புளி கரைசல் - கால் கப்
கறிவேப்பிலை
கொத்தமல்லித்தழை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு பொரிக்கவும்.
பிறகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காய தூள் சேது வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர், தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். தற்போது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு, புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான வெங்காய குழம்பு ரெடி..!