உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியாவிடம் படுதோல்வியடைந்த வங்கதேசம்

இங்கிலாந்தின் கார்டிபில் நேற்று நடந்த பத்தாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் 264 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் வங்கதேசம் இழந்து படுதோல்வியடைந்தது.

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க வீரர்கள் சொதப்பினாலும், லோகேஷ் ராகுல் மற்றும் தோனி அதிரடியாக விளையாடி இருவரும் சதமடித்து இந்திய அணியின் ஸ்கோரை 359 ரன்களுக்கு உயர்த்தினர்.

360 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரரான லித்தன் தாஸ் 73 ரன்களும், முஷ்பிகுர் ரஹீம் 90 ரன்களும் விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல போராடினர். ஆனால், அவர்கள் விக்கெட் சரிந்தவுடன், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், வங்கதேச அணி 49.3 ஓவர்களுக்கு பத்து விக்கெட்டுகளை இழந்து வெறும் 264 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் சாஹல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். நேற்றைய போட்டியில் தோனி அபாரமாக சதம் அடித்ததை சமூக வலைதளங்களில் தோனியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் பாருங்க.. 

More News >>