ஐயாம் சாரி மோடி ஜி... உங்கள் பதவியேற்பில் பங்கேற்க முடியாது... மம்தா காட்டம்
பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பதாக தெரிவித்திருந்த மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இப்போது திடீரென பங்கேற்க முடியாது என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.மே.வங்க அரசை பழி தீர்க்கும் வகையில் பாஜக தப்புப் தப்பாக குறை கூறுவதை ஏற்க முடியாது என்று காட்டமாக தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மே.வங்க முதல்வர் மம்தாவை குறிவைத்து பாஜக காய் நகர்த்தியது. இதனால் வன்முறை, கலவரம் வெடித்து மே.வங்க மாநிலமே கலவர பூமியானது, இறுதியில் நினைத்தபடியே கணிசமான தொகுதிகளில் பாஜக ஜெயித்தும் விட்டது.
தனது மண்ணில் சதி செய்து தனது வெற்றியை பாஜக தட்டிப்பறித்து விட்டது என்று அடங்காத கோபத்தில் உள்ளார் மம்தா .ஒரு கட்டத்தில் முதல்வராகக் கூட செயல்பட முடியவில்லை. முதல்வர் அதனால் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்றும் கூட ஆதங்கப்பட்டார் மம்தா .
இந்நிலையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு மம்தாவுக்கு அழைப்பு வந்தது. ஒரு மாநில முதல்வர் என்ற வகையில் பிரதமர் பதவியேற்பில் பங்கேற்பது ஜனநாயகக் கடமை. அதனால் டெல்லி செல்லவுள்ளேன் என்று மம்தாத அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று திடீரென டிவிட்டரில் ஒரு காட்டமான ஸ்டேட்மென்ட் விட்டு, தாம் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் மம்தா .
இது குறித்து டிவிட்டரில் மம்தா கூறியுள்ளதாவது: வாழ்த்துக்கள் மோடி ஜி, அரசியல் அமைப்புச் சட்டத்தை மதித்து, தங்களின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்திருந்தேன். ஆனால் கடந்த சில மணி நேரமாக மீடியாக்களில் செய்திகள், பாஜகவால் திட்டமிட்டு மே.வங்க அரசை பழி தீர்ப்பது போல் உள்ளது.மே.வங்கத்தில் 54 அரசியல் படுகொலைகள் நடந்ததாக விஷமச் செய்திகளை பாஜக பரப்புகிறது. நடந்துள்ளனவே தவிர அப்படியெதுவும் அரசியல் படுகொலைகள் நடக்கவில்லை. அதற்கான ஆதாரங்களும் கிடையாது.
அது மட்டுமின்றி, ஜனநாயகத்தின் முக்கிய கொண்டாட்டமான பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியை தங்கள் கட்சியின் நிகழ்ச்சியாக நடத்துவதை என்னால் ஏற்க முடியவில்லை.
அதனால் ஸோ சாரி மிஸ்டர் மோடி ஜி, இது போன்ற நிகழ்வுகளால் தங்களின் நிகழ்ச்சியின் பங்கேற்க முடியாத சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளேன்.ஸோ, பிளீஸ் எக்ஸ்கியூஸ் மீ என்று மம்தா காட்டமாக பதிவிட்டு, தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.