மாமியார் இறந்த சோகத்துல இருக்கேன்... என்னை விட்டுடுங்க... வடிவேலு உருக்கம்
‘நேசமணிக்கு பிரார்த்தனை செய்வோம் என்ற ஹேஸ்டேக் குறித்து எனக்கு எதுவும் தெரியாதய்யா... என் மாமியார் இறந்த சோகத்துல இருக்கிறேன், என்னை விட்டுடுங்க சார்...’’ என்று வடிவேலு உருக்கமாக கூறியிருக்கிறார்.
பிரண்ட்ஸ் என்ற தமிழ் திரைப்படத்தில் வடிவேலு நடித்த பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி என்ற கேரக்டரை போட்டு, நேசமணிக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்ற ஹேஸ்டேக், ட்விட்டரில் உலக அளவில் பிரபலமாகி வருகிறது. இது குறித்து, நியூஸ் 7 தொலைக்காட்சி நிருபர், நடிகர் வடிவேலுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது வடிவேலு கூறியதாவது:
எனக்கு அது என்னான்னே தெரியலய்யா. எல்லா மீடியாவும் போன் பண்ணி கேக்கிறாங்கய்யா. அம்மா சத்தியமா எனக்கு இதப்பத்தி எதுவும் தெரியாதய்யா. ஆனா, ஒரு விஷயம் சொல்றேன்யா. உலகம் முழுவதும் நான் பேமஸ் ஆகிட்டேனுல்ல. எனக்கு அது போதுமய்யா. ஆனா, உண்மையில நான் யாரையும் தாக்கி எதுவும் சொல்லவில்லை. என்னோட தாய், அண்ணன் தம்பி என்று குடும்பத்தைப் பாத்துட்டு இருக்கேன். என் மாமியார் இறந்து போய் பத்து நாளாகுது. அந்த சோகத்துல இருக்கேன். என்னை விட்டுடுங்கய்யா...இவ்வாறு வடிவேலு கூறினார்.