பிரமாதமான சுவையில் தக்காளி புலாவ் ரெசிபி
வீட்டில் அனைத்து தரப்பினருக்கும் பிடித்த தக்காளி புலாவ் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப்
தக்காளி - 4
வெங்காயம் - 2
இஞ்சி - 1
பூண்டு - 2
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - அரை
சிவப்பு மிளகாய் - 5
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
ஏலக்காய்
கிராம்பு
பட்டை
பிரியாணி இலை
நட்சத்திர சோம்பு
ஜாதிக்காய்
முந்திரி
சர்க்கரை - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை
புதினா இலை
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு
செய்முறை:
முதலில், மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், சிவப்பு மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா இலை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு, பாஸ்மதி அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் நெய்விட்டு உருக்கியதும் கிராம்பு, பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய் போட்டு பொரிக்கவும். கூடவே, முந்திரி பருப்பு போட்டு வறுக்கவும்.
பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அத்துடன், அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறவும்.கூடவே, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
பிறகு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும், புதினா, கொத்தமல்லித்தழை, பாஸ்மதி அரிசி போட்டு நன்றாக கிளறிவிடவும்.
பின்னர், ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து குக்கர் மூடிபோட்டு ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.
இறுதியாக, ஆவி முழுமையாக போனதும் மூடியை திறந்து மிதமாக கிளறி தட்டில் போட்டு தொட்டுக்க தயிர் பச்சடியுடன் சுடச்சுட பரிமாறவும்.அவ்ளோதாங்க.. சுவையான தக்காளி புலாவ் ரெடி..!