அடடே.. சுவையான புளியோதரை ரெசிபி

கோயில் பிரசாதம்போன்ற சுவையில் புளியோதரை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

வேர்க்கடலை - ஒரு கைப்படி

கடுகு - ஒரு தேக்கரண்டி

மிளகு - ஒரு டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் - 5

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

வெல்லம் - ஒரு துண்டு

தனியா - ஒரு டீஸ்பூன்

எள் - அரை டீஸ்பூன்

வெந்தயம் - அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - கால்டீஸ்பூன்

புளி கரைசல் - ஒரு கப்

நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை

உப்பு

செய்முறை:

முதலில், புளியோதரைக்கு தேவையான மசாலாவை அரைத்துக் கொள்ளலாம்.ஒரு வாணலியில் உளுத்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், எள், தனியா, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். இதனை ஆரவைத்து பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.

பின்னர், புளியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து தனியாக கரைசலை எடுத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றவும்.பிறகு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

தொடர்ந்து, புளி கரைசல் ஊற்றி அத்துடன் உப்பு சேர்த்து கிளறி கொதிக்கவிடவும்.

பின்னர், அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கொதிக்கவிடவும். இந்த கலவை கெட்டியாக மாறியதும் இறக்கவும்.

அடுத்ததாக, உதிரியான வெள்ளை சாதத்தில் கலவையை சேர்த்து கிளறி பரிமாறவும்.

சுவையான புளியோதரை ரெசிபி தயார்..!

More News >>