கோவில் தேர் எரிந்து நாசம் - அடுத்தடுத்த தீ விபத்தால் பொதுமக்கள் அச்சம்

வேலூரில் உள்ள பொன்னியம்மன் கோவில் தேர் தீ பிடித்து எரிந்து, சேதமடைந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் சத்துவாச்சாரியில் உள்ள மாரியம்மன், பொன்னியம்மன் கோவிலில் 22 அடி உயரம் கொண்ட 2 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நள்ளிரவில் திடீரென் தீப்பற்றி தேர் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், தேர் பெருமளவு சேதம் ஆகியது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.2) இரவு மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் உள்ள கடைகளில் தீப்பிடித்ததில் 30க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இந்நிலையில் மீண்டும் ஒரு கோயிலில் தீ விபத்து நடந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த தீ விபத்துகளில் யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா அல்லது சதி வேலையா என கேள்வி எழுகிறது.

More News >>