இணை அமைச்சர்கள்(தனிப்பொறுப்பு) இலாகாக்கள் ஒதுக்கீடு விவரம்
மோடி அமைச்சரவையில் இணை அமைச்சர்கள்(தனிப்பொறுப்பு) ஒவ்வொருவருக்கும் துறைகள் ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றார். மேலும், 24 கேபினட் அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்பு இணையமைச்சர்கள் 9 பேரும், இணையமைச்சர்கள் 24 பேரும் பதவியேற்றனர். பிரதமரை சேர்க்காமல் மொத்தம் 57 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
தனிப்பொறுப்பு இணை அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் வருமாறு:
சந்தோஷ்குமார் கேங்வார்- தொழிலாளர் நலன் துறை
ராவோ இந்தர்ஜித்சிங் - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை.
ஸ்ரீபத்நாயக் - ஆயூர்வேதம், ஆயுஷ் மற்றும் பாதுகாப்பு துறை
ஜிதேந்திரசிங் - வடகிழக்கு வளர்ச்சி, பிரதமர் அலுவலகம்,
பணியாளர் மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி;
கிரண் ரிஜ்ஜூ - இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு, சிறுபான்மை.
பிரகலாத்சிங் படேல் - கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை
ராஜ்குமார்சிங் - மின்சாரம், புதுப்பிக்கத்தக்க சக்தி, திறன்மேம்பாடு
ஹர்தீப்சிங்புரி - வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, விமானபோக்குவரத்து, வர்த்தகம் மற்றும் தொழில் துறை
மன்சுக்மாண்ட்வியா- கப்பல், ரசாயனம் மற்றும் உரம்
இவ்வாறு தனிப் பொறுப்பு இணை அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.