இணை அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள்
மோடி அமைச்சரவையில் இணை அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் துறைகள் ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றார். மேலும், 24 கேபினட் அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்பு இணையமைச்சர்கள் 9 பேரும், இணையமைச்சர்கள் 24 பேரும் பதவியேற்றனர். பிரதமரை சேர்க்காமல் மொத்தம் 57 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
இணை அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் வருமாறு:
பக்கன்சிங் குலாஸ்தே - ஸ்டீல் துறை
அஸ்வினிகுமார் சவுபே - சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்.
அர்ஜூன்ராம் மேவால் - நாடாளுமன்ற விவகாரம், கனரக தொழில்.
வி.கே.சிங் - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை.
கிருஷ்ணன்பால் - சமூகநீதி மற்றும் உரிமையளிப்பு.
தன்வீர் தவ்சாகேப் தவாரோ- நுகர்வோர், உணவு, பொது விநியோகம்.
கிஷான் ரெட்டி - உள்துறை,
புருஷோத்தம் ரூபாலா- விவசாயம், விவசாயிகள் நலன்
ராமதாஸ் அதவாலே - சமூகநீதி மற்றும் உரிமையளிப்பு
சாத்வி நிரஞ்சன் ஜோதி - ஊரக வளர்ச்சித் துறை.
பாபுல் சுப்ரியோ - சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவமாறுபாடு.
சஞ்சீவ்குமார் - கால்நடைபராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம்.
டோத்ரே சஞ்சய்சாம்ராவ் - மனிதவள மேம்பாடு, தகவல்ஒலிபரப்பு, ஐ.டி,
அனுராக்சிங் தாக்குர்- நிதி மற்றும் வர்த்தகத் துறை
அங்கடி சுரேஷ் - ரயில்வே துறை
நித்யானந்த் ராய்- உள்துறை
ரத்தன்லால் கட்டாரியா - நீர்மேலாண்மை, சமூகநீதி
முரளீதரன்- வெளியுறவு, நாடாளுமன்றம்
ரேணுகாசிங் - பழங்குடியினர் நலன்
சோம்பிரகாஸ்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை
ராமேஸ்வர் தெலி- உணவு பதனிடும் துறை
பிரதாப்சந்திர சாரங்கி - சிறு,குறு நடுத்த தொழில்கள், கால்நடை
கைலாஷ்சவுத்ரி - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன்தேபாஸ்ரீ சவுத்ரி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்
இவ்வாறு இணை அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.