ஈசியா செய்யலாம் முட்டை பிரெட் டோஸ்ட் ரெசிபி

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய முட்டை பிரெட் டோஸ்ட் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பிரெட் துண்டுகள் - 4

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

முட்டை - 4

மிளகாய்த் தூள்

மிளகுத்தூள்

உப்பு

செய்முறை:

முதலில் பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி எடுக்கவும். பிறகு, பிரெட் துண்டின் நடுவில் ஒரு வட்டாமன தம்ளர் அல்லது சிறிய கிண்ணத்தின் மூலம் அழுத்தி பிரெட்டை வெளியில் எடுத்துவிடவும்.

ஒரு வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கவும்.

பிறகு, வெட்டி வைத்த பிரெட் துண்டை அதில் வைத்து நடுவில் முட்டையை உடைத்து ஊற்றவும்.

அதன்மீது, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு தூவி வேகவிடவும். ஒரு பக்கம் வெந்ததும், பிரெட்டை மறு பக்கம் திருப்பிப் போட்டு வேகவிடவும்.

அவ்ளோதாங்க.. சுவையான முட்டை பிரெட் டோஸ்ட் ரெடி..!

More News >>