இந்திமொழி திணிப்பு கூடாது...ஆனால் விரும்பியதை கற்கலாம்... கமல்ஹாசன் கருத்து

பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இந்தியை திணிக்கக் கூடாது; ஆனால் விரும்பிய மொழியை யாரும் கற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

நாடு முழுவதும் பள்ளிகளில் மும்மொழியை கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற முடிவை எடுத்து, அதற்கான வரைவு அறிக்கையையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு முயற்சிக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.போராட்டம் வெடிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக எம்.பி.கனிமொழியோ, இந்தித் திணிப்பை தமிழகத்தில் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என காட்டமாக தெரிவித்துள்ளார்

இந்நிலையில் இந்த இந்தித் திணிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று திருச்சியில் கூறுகையில், நான் இந்திப் படத்தில் நடித்தவன். எந்த மொழியையும் கட்டாயமாக திணிக்கக் கூடாது. ஆனால் விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையும் கற்கலாம் என்று தனக்கே உரிய பாணியில் குழப்பமாக தெரிவித்துள்ளார். மேலும் மோடி தலைமையிலான மத்திய அரசு நன்றாக செயல்பட வேண்டும் என்பதே, ஒரு இந்தியனாக என்னுடைய ஆசை என்று கமல் தெரிவித்துள்ளார்.

More News >>