சட்டுன்னு செய்யலாம் தித்திக்கும் பூந்தி ரெசிபி

வீட்டிலேயே மிக எளிமையாக செய்யக்கூடிய தித்திக்கும் பூந்தி ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சர்க்கரை - 2 கப்

ஏலக்காய் - 2

கடலை மாவு - ஒரு கப்

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

முந்திரி - 10

உலர் திராட்சை - 20

செய்முறை:

முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் சர்க்கரை சேர்த்து, அதனுடன் ஒரு ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்து ஜீரா காசவும். கூடவே, இடித்த ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும்.

சர்க்கரை கரைந்து ஜீரா பதத்திற்கு வந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

இந்த கலவை மிக கெட்டியாகவும் இருக்கக்கூடாது, மிக தண்ணியாகவும் இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.ஒரு பெரிய ஜல்லிக் கரண்டியை அதன்மீது வைத்து, கடலை மாவு கலவையை ஊற்றி தேய்க்கவும். கரண்டியின் ஒட்டை வழியே விழும் மாவு பூந்தியாக எண்ணெய்யில் விழுந்து பொரியும்.

பூந்தி பொன்னிறமாக மாறியதும் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.

மற்றொரு வாணெலியில் நெய்விட்டு சூடானதும் முந்திரி பருப்பு, உலர் திராட்சை சேர்த்து நன்றாக வறுத்து, பூந்தி கலவையில் சேர்த்து கிளறவும்.

ஜீரா ஆறியதும், பூந்தியுடன் சேர்த்து கிளறி சுமார் அரை மணி நேரம் ஊற வைத்தால் சாப்பிட தயாராகிவிடும்.

சுவையான தித்திக்கும் பூந்தி ரெடி..!

More News >>