உங்கள் பற்கள் பால்போல் வெண்மையாக வேண்டுமா?

மற்றவர்களிடம் பேசும்போது அவர்கள் கவனத்தை கவருவதில் பற்களுக்கு முக்கியமான இடமுண்டு. 'முத்துபோன்ற பல்வரிசை' 'பால்போன்ற பற்கள்' என்றெல்லாம் வர்ணிக்கிறோம். பல் மருத்துவம் இப்போது செலவுமிக்க ஒரு துறை. அந்த அளவுக்கு பற்களுக்குப் பாதுகாப்பும் பராமரிப்பும் அவசியமாகிவிட்ட காலகட்டம் இது.செலவில்லாமல் மருந்தில்லாமல் பற்களை பாதுகாக்க சில வழிகள் உள்ளன.

வாழைப்பழத்தோல்:

வாழைப்பழத்தை ஒரு முழுமையான பழம் என்பர். அதிக ஊட்டச்சத்துகள் அதில் அடங்கியுள்ளன. பழத்தை விடுங்கள்; உங்கள் பற்களை பளபளப்பாக்கக்கூடிய சத்துகள் வாழைப்பழத்தில் தோலில் உள்ளன என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? ஒரு நிமிட நேரம் வாழைப்பழத்தோலால் தினமும் ஒருமுறையோ, இருமுறையோ உங்கள் பற்களை தேய்த்திடுங்கள். வாழைப்பழத்தோலிலுள்ள பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் ஆகிய தாதுகள் உங்கள் பற்களில் சேரும். அதனால் பற்கள் பால்போல பளிச்சிடும் வெண்மைக்கு மாறிடும். ஆரஞ்சு பழத்தோலையும் பற்களில் தேய்த்திடலாம்.

ஸ்ட்ராபெர்ரி:

ஒன்று அல்லது இரண்டு ஸ்ட்ராபெர்ரி பழங்கள் கூழாக அரைத்திடுங்கள். அவற்றை பற்களின்மேல் பூச வேண்டும். இரண்டு அல்லது மூன்று நிமிட நேரம் கழித்து வாய் கொப்பளிக்கவும். பல் துலக்கினாலும் நன்று. ஸ்ட்ராபெர்ரியில் உள்ள மாலிக் அமிலம் போன்ற இயற்கை நொதிகள் (என்சைம்) மற்றும் அப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்து ஆகியவை பற்களை சுத்தமாக்குகின்றன. பற்களுக்கு பாதிப்பை கொண்டு வரக்கூடிய நுண்ணுயிரிகளை (பாக்டீரியா) இவை கொல்லுகின்றன. ஆகவே பற்களும் வாயும் சுத்தமாகின்றன.

காரட்:

காரட், இயற்கை சுத்திகரிப்பான். காரட்டை நன்கு கழுவி சமைக்காமலே கடித்து சாப்பிடுங்கள். அப்போது பற்களில் படிந்து காறை சுத்தமாகும். காரட் துண்டுகளை பற்களில் தேய்த்தால் பற்கள் பளிச்சிடும். ஆப்பிள் மற்றும் செலரி ஆகியவையும் ஈறுகளை பலப்படுத்தி பற்களை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை. இவற்றை பயன்படுத்துவதால் வாய் துர்நாற்றத்தை போக்கலாம்.

இவற்றை செய்வதோடு புகைபிடிக்கும் பழக்கம், புகையிலை வஸ்துகளை பயன்படுத்துதல் ஆகியவற்றை அடியோடு விட்டுவிடுவதும் அவசியம். அதிக சூடான மற்றும் குளிரான பானங்கள் பற்களில்படுவதுபோல அருந்தவேண்டாம். அவை நேரடியாக பற்களில் பட்டால் பல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

More News >>