ஆரோக்கியமான கடலை உருண்டை ரெசிபி
வீட்டிலேயே ஆரோக்கியமான கடலை உருண்டை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
வேர் கடலை - 2 கப்
வெல்லம் - ஒரு கப்
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாலை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில், வேர் கடலையை வறுத்து எடுக்கவும். ஆறியதும், தோலை நீக்கிவிட்டு கடலையை தனியாக ஒரு கிண்ணத்தில் வைக்கவும் .
ஒரு கிண்ணத்தை அடுப்பில் வைத்து வெல்லம், ஏலக்காயத்தூள், தண்ணீர் சேர்த்து கரைத்து ஜீரா தயாரிக்கவும்.
பின்னர், இந்த ஜீராவை வேர் கடலையுடன் வடிகட்டி சேர்த்துக் நன்றாக கிளறிக் கொள்ளவும்.
இந்த கலவையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டை செய்து ஆற வைக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான கடலை மிட்டார் ரெடி..!