டூர் கிளம்பிய மோடி: பாலஸ்தீனத்துக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமராம்..!

பிரதமர் மோடி ஆறு மாதகால இடைவெளிக்குப் பின்னர் இன்று மூன்று நாள்ப் பயணமாக பாலஸ்தீனம் உள்ளிட்ட மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளுக்கும் பிரதமர் மோடி பயணம் செய்து வருகிறார். இந்த வகையில் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் சென்று வந்தார் மோடி. அதன்பின்னர் இந்திய அரசியல் சூழல்களை மேம்படுத்த வேண்டுமெனவும் பொருளாதார, சமூக சூழல்களை சீர்படுத்த வேண்டுமெனவும் ஆறுமாத காலம் இந்தியாவிலேயே இருந்து கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தியாவின் அண்டை நாடுகள் உடனான உறவை மேம்படுத்த பாலஸ்தீனத்துக்கு இன்று பயணமாகிறார் பிரதமர் மோடி. மேலும் அடுத்த மூன்று நாள்களுக்கு பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் மூலம் பாலஸ்தீனத்துக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பிரதமர் மோடி பெறுகிறார்.

 

More News >>