ஆரோக்கியமான காய்கறிகள் நிறைந்த சீஸ் ஆம்லெட் ரெசிபி

உடலுக்கு சத்துத்தரும் காயகறிகள் நிறைந்த சீஸ் ஆம்லெட் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

முட்டை - 2

பெரிய வெங்காயம் - பாதி

தக்காளி - பாதி

பச்சை மிளகாய் - 1

குடை மிளகாய் - பாதி

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

சீஸ் - ஒரு கட்டி

எண்ணெய்

உப்பு

செய்முறை:

ஒரு கிண்ணத்தில், முட்டையை உடைத்து ஊற்றவும்.

பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், முட்டையை ஊற்றி ஆம்லெட் செய்யவும்.

ஒரு பாதி வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடவும். அப்போது, துருவிய சீஸ், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் தூவி மடித்து வேகவிடவும்.

அவ்ளோதாங்க.. சுவையான வெஜ் சீஸ் ஆம்லெட் ரெடி..!

More News >>