உடலுக்கு ரொம்ப நல்லது.. எள்ளு உருண்டை ரெசிபி

வீட்டிலேயே சுகாதாரமான முறையில் குழந்தைகளுக்கு எள்ளு உருண்டை செய்துக் கொடுங்க.. சரி, இப்போ எள்ளு உருண்டை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கருப்பு எள்ளு - ஒரு கப்

வெல்லம் - முக்கால் கப்

நெய் - ஒரு டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை:

முதலில், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து கருப்பு எள்ளு சேர்த்து வறுக்கவும். எள்ளு வெடித்து வாசம் வந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லி மற்றும் தண்ணீர் சேர்த்து கரைய வைக்கவும். கரைந்த பிறகு வடிகட்டி மீண்டும் கொதிக்கவிட்டு பாகு பதத்திற்கு தயார் செய்யவும்.

வெல்லம் பாகு பதத்திற்கு வந்ததும், எள்ளு சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.இடையே, நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்களில் இறக்கிவைக்கவும்.

எள்ளு கலவை ஆறியதும், கையில் நெய் தடவி கொஞ்சம் கொஞ்சமாக அதனை எடுத்து உருண்டைகள் செய்யவும்.

அவ்ளோதாங்க.. சத்து நிறைந்த எள்ளு உருண்டை ரெடி..!

More News >>