சத்து நிறைந்த வேர்கடலை குழம்பு ரெசிபி

சத்துக்கள் நிறைந்த வேர்கடலை குழம்பு எப்படி செய்வதென்று இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

வேகவைத்த வேர்க்கடலை - அரை கப்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

பூண்டு - 3

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

குழம்பு மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்

புளி கரைசல் - ஒரு கப்

கறிவேப்பிலை

கொத்தமல்லித்தழை

உப்பு

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, தட்டியப் பூண்டு சேர்த்து தாளிக்கவும்.பிறகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து வேகவிடவும்.

அடுத்ததாக, வேர்கடலை, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசதனை போகும் வரை கிளறவும். தேவைப்பட்டால் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

பிறகு, புளி கரைசலை சேர்த்து குழம்பை கொதிக்கவிடவும்.குழம்பு கொதிவந்து கொஞ்சம் கெட்டியாக ஆனதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிவிடலாம்.

அவ்ளோதாங்க.. சத்து நிறைந்த வேர்கடலை குழம்பு ரெடி..!

More News >>