அசத்தலான சுவையில் மட்டன் கறி ரசம் ரெசிபி
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மட்டன் கறி ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
மட்டன் - கால் கிலோ
தக்காளி - ஒன்று
புளி - ஒரு எலுமிச்சைப்பழம் அளவு
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 8
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 1
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்தமல்லித்தழை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில், மட்டனை சுத்தமாக கழுவி குக்கரில் போட்டு அத்துடன் தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து சுமார் 5 விசில் விடவும்.
அடுத்ததாக, மிளகு, சீரகம், பூண்டு, ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளி அரைத்துக் கொள்ளவும். புளி கரைசலுடன் தக்காளி விழுது சேர்த்துக் கொள்ளவும். கூடவே, மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு சேர்த்து பொரிக்கவும். கூடவே, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், அரைத்து வைத்து மசாலா, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
தற்போது, புளிகரைசல், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்துவிட்டு மட்டன் சாறை சேர்த்து கலக்கவும்.அவ்ளோதாங்க.. சுவையான மட்டன் கறி ரசம் ரெடி..!