கேட் உமனாக மாறிய சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தனது சமூக வலைதள பக்கத்தில் பூனை போன்று கவர்ச்சி உடை உடுத்தியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆபாச பட நடிகையாக இருந்து பாலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக மாறிய சன்னி லியோன், தனது வாழ்க்கை குறித்த கரஞ்சித் கவுர் வெப் சீரிஸில் நடித்து, ஆபாச பட உலகில் தான் ஏன் தள்ளப்பட்டேன் என்றும், அதிலிருந்து எப்படி மீள முயற்சித்தேன் என்பதையும் விளக்கி வருகிறார்.

வெளிவந்த இரு சீசன்களும் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்ட நிலையில், சன்னிலியோன் தென்னிந்திய மொழிப் படங்கள் மீதும் தற்போது தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், அவ்வப்போது தனது ரசிகர்களை குஷிபடுத்த கவர்ச்சி உடைகளை அணிந்து எடுக்கப்படும் போட்டோஷுட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

லேட்டஸ்ட்டாக பூனை தோல் போன்ற ஆடையை உடுத்தி அதற்கு கேப்ஷனாக மியாவ் என்று பதிவிட்ட போஸ்ட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சன்னி லியோன்.

More News >>