இனி ஹோம்லி இல்லை கவர்ச்சி பக்கம் ரூட்டை மாற்றும் ராஷி கண்ணா
மாடர்ன் உடை அணிந்து நடித்தாலும், டீசண்ட் ஆக நடித்து வந்த நடிகை ராஷி கண்ணா தனது ரூட்டை கவர்ச்சி ஏரியா பக்கம் திருப்பியுள்ளார்.
விவா லாமோர் எனும் ஃபேஷன் இதழ் அட்டை படத்தில் படுகவர்ச்சியாக உடை அணிந்து ராஷி கண்ணா போஸ் கொடுத்துள்ள படம் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மேலும், அதில் நான் கடவுள், விதி மற்றும் கடின உழைப்பை நம்புகிறேன் என ராஷி கண்ணா தெரிவித்துள்ளதாக அந்த அட்டை படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ராஷி கண்ணா, அடங்கமறு படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தார்.
சமீபத்தில் வெளியான விஷாலின் அயோக்யா படத்தில் நடித்துள்ள ராஷி கண்ணா, அடுத்து விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் மற்றும் கடைசி விவசாயி படங்களிலும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.