பிரிட்டனின் புகழ்மிக்கவர்கள் பட்டியலில் இந்தியச் சிறுமி!

பிரிட்டனின் டாப் 100 புகழ்மிக்கவர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 வயது சிறுமி சோஹிணி ராய் சவுத்ரி இடம்பெற்றுள்ளார்.

டெல்லியில் பிறந்து பிரிட்டனின் பர்மிங்ஹாம் பகுதியில் வாழ்ந்து வருபவர் சிறுமி சோஹிணி. பர்மிங்ஹாம் பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். கணிதத்தில் ஆர்வம் கொண்ட சிறுமி சோஹிணி உலகளவில் ஆன்லைன் மூலமாக நடைபெறும் கணிதப் போட்டிகளில் பங்கேற்பதை தனது பொழுதுபோக்காகவே வைத்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர் பிரிட்டன் கணிதப் போட்டியில் சர்வதேச அளவில் பங்கேற்ற ஆரம்பப் பள்ளி மாணவர்களுள் டாப் 100 பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

கோடிக்கணக்கானோர் பங்குபெறும் கணிதப் புதிர் போட்டியில் வென்றதன் மூலம் பிரிட்டனின் டாப் 100 புகழ்மிக்கவர்கள் பட்டியலில் சிறுமி சோஹிணி இடம்பிடைத்துள்ளார். இவரது தந்தை பிரிட்டனில் கணக்காளராக உள்ளார். தனது நீண்ட கால லட்சியமே மருத்துவர் ஆவதுதான் எனத் தெரிவிக்கிறார் சிறுமி சோஹிணி.

More News >>