ஸ்மார்ட்போன் கேம் பிரியரா நீங்கள்? பிளாக் ஷார்க் 2 விற்பனைக்கு வந்துவிட்டது!
ஸ்மார்ட்போனில் விளையாடும் ஆர்வமுள்ளவர்களுக்காகவே பல்வேறு தொழில்நுட்பங்களை பிரத்யேகமாக கொண்டுள்ள பிளாக் ஷார்க் 2 போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஜூன் 4ம் தேதி நண்பகல் 12 முதல் ஃபிளிப்கார்ட் மூலம் இதை வாங்கலாம்.
தற்போதைய குவல்காம் ஸ்நாப்டிராகன் 855 சிப்செட் மற்றும் வெப்பத்தை கட்டுப்படுத்தும் லிக்யூட் கூல் 3.0 தொழில்நுட்பம், அழுத்தத்தை உணரக்கூடிய மேஜிக் பிரஸ் தொழில்நுட்பம் ஆகியவற்றை பிரத்யேகமாக கொண்டுள்ளது.
ஸோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க்2 போனின் சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.39 முழு ஹெச்டி AMOLED டிஸ்ப்ளே; 1080X2340 தரம்
முன்பக்க காமிரா: 20 எம்பி ஆற்றல்
பின்பக்க காமிரா: 48 எம்பி மற்றும் 12 எம்பி ஆற்றல் கொண்ட இரு காமிராக்கள்
பேட்டரி: 4000 mAh மின்னாற்றல்
சார்ஜிங்: 27W வேகமான மின்னேற்றம்
6 ஜிபி RAM இயக்க வேகத்துடன் 64 ஜிபி சேமிப்பளவு கொண்ட போன் ரூ.39,999 விலையிலும்
12 ஜிபி RAM இயக்கவேகத்துடன் 256 ஜிபி சேமிப்பளவு கொண்ட போன் ரூ.49,999 விலையிலும் கிடைக்கிறது. ஃபிளிப்கார்ட் விலையில்லா மாத தவணை (no-cost EMI) மற்றும்
ஆக்ஸிஸ் வங்கி கடன் அட்டை மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பத்து விழுக்காடு தள்ளுபடி ஆகிய சலுகைகளை அறிவித்துள்ளது.