92 நாடுகள் பங்கேற்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கியது
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் இன்று தொடங்கியது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தப்போட்டி இன்று தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் என்ற நகரில் தொடங்கியது. இது, 25ம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உறைபனியில் நடத்தப்படக்கூடிய விளையாட்டுகள் மட்டும் இந்த போட்டியில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில், ஐஸ் ஆக்கி, பனிச்சறுக்கு, ஸ்கேட்டிங் உள்பட 15 வகையான விளையாட்டுகள் நடைபெறுகிறது. இதில், இந்தியா, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சிலி, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்பட 92 நாடுகளை சேர்ந்த 2,952 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
தென்கொரியாவில் நடைபெறும் இந்த போட்டியில் வடகொரியாவும் பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.