சுவையான முட்டை பட்டர் மசாலா ரெசிபி
மிக எளிமையாக செய்யக்கூடிய முட்டை பட்டர் மசாலா ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வேகவைத்த முட்டை - 5
பட்டை, ஏலக்காய், கிராம்பு
வெங்காயம் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
தக்காளி - 3
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
உப்பு
செய்முறை:
வாணலியில் வெண்ணெய்விட்டு உருகியதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கவும்.
கூடவே, பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகம் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் முந்திரி பருப்பு சேர்க்கவும்.
பின்னர், பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். அத்துடன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிவிட்டு இறக்கி ஆறவைக்கவும்.
பிறகு, இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.மீண்டும் மற்றொரு வாணலியில், வெண்ணெய் சேர்த்து உருகியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு, அரைத்து வைத்த விழுது, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கூடவே, முட்டையை நான்கு பக்கத்தில் கீறிவிட்டு கலவையுடன் சேர்த்து கிளறி சுமார் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
இந்த கலவை கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும்.
அவ்ளோதாங்க.. சுவையான முட்டை பட்டர் மசாலா ரெடி..!