டயட் ரெசிபி.. பாலியோ பட்டர் டீ குடிச்சு பாருங்க..
பாலியோ டயட்டில் இருக்கிறவங்களுக்கான சூப்பர் டீ எப்படி செய்வதென்று பார்க்கலாம்...
தேவையான பொருட்கள்:
பசும் பால் - 90 மிலி
வெண்ணெய் - 30 கிராம்
டீ தூள் - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில், பால் பாத்திரத்தில் பால், தண்ணீர் சேர்த்து நன்றாக காய்ச்சவும்.
பால் பொங்கி வரும்போது பட்டர், டீ தூள் சேர்த்து கிளறி கொதிக்கவிடவும்.
டீத்தூளின் சாறு முழுவதும் பாலில் இறங்கியதும் இறக்கிவிடலாம். தேவைப்படுபவர்கள் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
சுடச்சுட பாலியோ பட்டர் டீ ரெடி..!