மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை கட்டாயமாக்குக... மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய நேரத்தில், அரசியல் நிர்ணய சபையில், ஆட்சி மொழியில் ஒன்றாக தமிழை ஆக்கிட வேண்டும் என குரல் கொடுத்தவர் காயிதே மில்லத்.

நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கை செயல்படுத்தப்படாமல் உள்ளது. மாறாக, இன்று மும்மொழி பாடத்திட்டம் என்ற பெயரில், தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிக்க மத்திய அரசுத் தரப்பில் முயற்சிகள் நடக்கிறது.

ஆனால் தமிழக மக்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பால் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கைவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாயமாக்க வேண்டும். ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

More News >>