யாராவது கஞ்சா மூட்டைகளை தொலைச்சுட்டீங்களா?
‘‘யாராவது கஞ்சா மூட்டைகளை தொலைச்சுட்டீங்களா, கவலைப்படாதீ்ர்கள். நாங்க அதை கண்டுபிடிச்சுட்டோம்... எங்க கிட்ட வாங்க...’’ இப்படி சொன்னது யார் தெரியுமா? போலீஸ்காரங்க!
அசாமில் துர்பி செக்போஸ்ட் அருகே போலீசார் ரோந்து சுற்றி வந்த போது ஒரு மறைவான இடத்தில் கஞ்சா மூட்டைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதில் மொத்தமாக 590 கிலோ கஞ்சா இருந்துள்ளது. அதை கைப்பற்றிய போலீசார், அதை கடத்த முயன்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த மூட்டைகளை படம் பிடித்து அதை காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்கள். அத்துடன், ‘‘துர்பி செக்போஸ்ட்டுக்கு பக்கத்தில் யாராவது கஞ்சா மூட்டைகளை(590கிலோ) தொலைத்து விட்டீர்களா? கவலைப்படாதீர்கள். அதை நாங்க கண்டுபிடிச்சு விட்டோம். வேண்டுமென்றால், துர்பி காவல்துறையை அணுகுங்கள்.
அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்’’ என்று கிண்டலடித்து ஸ்மைல் பண்ணும் கார்ட்டூன் படத்தையும்(எமோஜி) போட்டிருக்கிறார்கள். அதன்பிறகு, ‘வெல்டன் துர்பி போலீஸ்’ என்று கஞ்சாவை கண்டுபிடித்த அதிகாரிகளுக்கு பாராட்டும் தெரிவித்திருக்கிறார்கள்.