2.0வை தொடர்ந்து சீனா செல்லும் அஜித் படம்!
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 இம்மாதம் 21ம் தேதி சீனாவில் ரிலீஸ் ஆகின்றது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தையும் வரும் டிசம்பர் மாதம் சீனாவில் ரிலீஸ் செய்ய படக்குழு ஆயத்தமாகி வருகிறதாம்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் நேர்கொண்ட பார்வை. அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை எச். வினோத் இயக்குகிறார்.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களின் வெற்றி, இயக்குநர் எச். வினோத்துக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பை அள்ளித் தந்துள்ளது. பிங்க் படத்தின் ரீமேக் படமான இந்த படத்தை முடித்து விட்டு, மீண்டும் ஒரு படத்தையும் எச். வினோத் அஜித்தை வைத்து இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆகஸ்ட் 10ம் தேதி நேர்கொண்ட பார்வை தமிழில் வெளியாகவுள்ள நிலையில், சீனாவில் இந்த படத்தை வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய போனி கபூர் தரப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.