தல ரம்ஜான் கொண்டாடிய ஆர்யா!

திருமணத்திற்கு பிறகு முதல் ரம்ஜானை கொண்டாடிய ஆர்யா, சாயிஷா தம்பதியினர்.

திருமணத்திற்கு பிறகு வரும் முதல் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை தல தீபாவளி மற்றும் தல பொங்கல் என்று கொண்டாடுவர்கள். தல என்பதற்கு முதல் என்ற அர்த்தம் உண்டு. மூத்த பிள்ளையை இதன் காரணமாகத் தான் தலைச்சன் பிள்ளை என்றும் கூறுவார்கள்.

நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா ஜோடி திருமணம் முடிந்த பின்னர் தங்களது முதல் ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடி உள்ளனர். சாயிஷாவின் அம்மாவுடன் ஆர்யா மற்றும் சாயிஷா ரம்ஜான் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கஜினிகாந்த் படத்தின் மூலம் சந்தித்துக் கொண்ட இருவருக்குள்ளும் ஏற்பட்ட காதல் விரைவில் திருமணத்தில் முடிந்தது கோலிவுட் உலகையே ஆச்சர்யப்பட வைத்தது. கலர்ஸ் தமிழில் தனக்கு பெண் தேடி எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ஷோவையே ஆர்யா நடத்தியது குறிப்பிடத்தக்கது.

வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள காப்பான் படத்திலும் இந்த ஜோடி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>