அடடே சுவையில்.. முந்திரி மசாலா கிரேவி ரெசிபி

சுவையான முந்திரி மசாலா கிரேவி ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - ஒன்றரை

தக்காளி - 3

முந்திரி - 2 கப்

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

பட்டை - ஒன்று

பிரியாணி இலை - ஒன்று

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் - அரை டீஸ்பூன்

கிரீம் - கால் கப்

கரம் மசாலா - அரை டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை

எண்ணெய் - 3 டீஸ்பூன்

உப்பு

செய்முறை:

கடாயில் நெய்விட்டு உருகியதும், முந்திரி பருப்பு போட்டு வருத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கி ஆற வைக்கவும்.

பிறகு, மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம், பட்டை, பிரியாணி இலை சேர்த்து பொறிக்கவும்.

பிறகு, பாதியளவு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின்னர், அரைத்து வைத்த விழுதை சேர்த்து கெட்டியாகும் வரை வதக்கவும்.கூடவே, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

பின்னர், கிரீம், முந்திரி பருப்பு சேர்த்து சுமார் 10 நிவீடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.இறுதியாக, கரம் மசாலா, கொத்தமல்லித்தழை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான முந்திரி மசாலா கிரேவி ரெடி..!

More News >>