இளநீருக்கு ஒரு செயலி Niu Neer

வழக்கமாக இளநீர் வியாபாரியை எங்கே தேடுவோம்? சாலை ஓரங்களில் மரங்களின் அடியில் அல்லது ஏதாவது அடைத்திருக்கும் கடை முன்பதாக டிரை சைக்கிளில் இளநீர்களை வைத்துக்கொண்டு நின்றிருப்பார்.

இளநீர் குடிக்கலாம் என்று நாம் கிளம்பிப் போகும்போது அவர் அங்கே இருக்கமாட்டார். முயற்சி எடுத்து வேறு இடத்திற்குச் சென்று பார்த்தால் அங்கே கேட்டதுமே தலையை சுற்றும் விலையை கூறுவார்கள்.

இதையெல்லாம் தவிர்ப்பதற்காக, வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய விலையில், தரமான இளநீர். அதேசமயம் தென்னை விவசாயிகளுக்கு உரிய விலையை உத்திரவாதம் செய்யும் விதமாக Niu Neer செயலி அறிமுகமாகியுள்ளது.

இதயத்திற்குப் பிடித்த இளநீரை வாங்குவற்கு இனி தடையேயில்லை என்ற விதமாக, மரத்திலிருந்து பறித்து ஒன்றிரண்டு நாள்களுக்குள்ளாகவே வாடிக்கையாளர்களின் வீடு தேடி இளநீர் தரப்படுகிறது. தற்போது Niu Neer செயலி, சென்னை மற்றும் மும்பை நகரங்களில் செயல்பாட்டு வந்துள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் ஹைதராபாத், பெங்களூரு, அஹமதாபாத், பூனா மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களுக்கும் விற்பனையை விரிவு செய்ய இருக்கின்றனர்.

பெரியவர்கள் மட்டுமல்ல ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கொண்ட இளம்தலைமுறையினரில் அநேகரும் தற்போது இளநீர் பருக ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>