அசத்தலான அப்பளக்கூட்டு ரெசிபி
சுவையான அப்பளக்கூட்டு எப்படி செயறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - ஒரு கப்
அப்பளம் - ஒரு கட்டு
தேங்காய் துருவல் - கால் கப்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பூண்டு - 5
வெந்தயம் - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு
செய்முறை:கடலை பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து கழுவி குக்கரில் போடவும். கூடவே, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பூண்டு, தண்ணீர் சேர்த்து 8 விசில் விட்டு இறக்கி மசித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அப்பளத்தை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து வைக்கவும்.
அதே வாணலியில், 2 டீஸ்பூன் எண்ணெய்யில் கடுகு, சீரகம்,, வெந்தயம், வர மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு பொரித்து எடுக்கவும்.
இதனை, மசித்து வைத்த பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.வாணலியில் இந்த பருப்பு கலவையை ஊற்றி மிதமான சூட்டில் வேகவிடவும். அதில், பொரித்த அப்பளத்தை உடைத்து போட்டு கிளறி வேகவிடவும்.
இறுதியாக தேங்காய்த் துருவலை தூவி இறக்கினால் சுவையான அப்பளக்கூட்டு ரெடி..!!