மதிய உணவுக்கான சூப்பர் ரெசிபி அப்பளக் குழம்பு

வெள்ளை சாதத்திற்கு ஏற்ற அப்பளக் குழம்பு ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

அப்பளம் - ஒரு கட்டு

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - ஒன்று

கடுகு - அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

வெந்தயம் - கால் டீஸ்பூன்

வடகம் - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

பூண்டு - 5

சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

புளி கரைசல் - ஒரு கப்

வெல்லம் - ஒரு துண்டு

நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை

உப்பு

செய்முறை:

ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து பொரிக்கவும்.

பிறகு, வடகம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பூண்டு, தக்காளி என ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.

தக்காளி வதங்கியதும், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, புளி கரைசல், தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை போகும்வரை நன்றாக கொதிக்கவிடவும்.குழம்பு கொதி வரும்போது, பொரித்து வைத்து அப்பளத்தை உடைத்து சேர்த்து மீண்டும் 5 நிமிடங்கம் கொதிக்கவிடவும்.

அவ்ளோதாங்க.. சுவையான அப்பளக் குழம்பு ரெடி..!

More News >>