ருசியான சைட் டிஷ்.. அப்பளம் பொரியல் ரெசிபி

அப்பளம் கொண்டு வித்தியாசமாக பொரியல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

உளுந்து அப்பளம் - ஒரு கட்டு

வெங்காயம் - ஒன்று

தேங்காய் துண்டு - ஒரு கப்

கடுகு - கால் டீஸ்பூன்

சோம்பு - கால் டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

பூண்டு - 4

பச்சை மிளகாய் - ஒன்று

கறிவேப்பிலை

கொத்தமல்லித்தழை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

மிக்ஸி ஜாரில் தேங்காய்த் துண்டு, பச்சை மிளகாய், பூண்டு, சீரகம், சோம்பு ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அப்பளத்தை பொரித்து எடுத்து நொறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்தது பொரிக்கவும்.

கூடவே பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்தது, அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி வேகவிடவும்.

பின்னர், நொறுக்கிய அப்பளத்தை சேர்த்து நன்றாக பிரட்டவும். தண்ணீர் தெளித்து ஒரு சில நிமிடங்களுக்கு கிளறி வேகவிடவும்.

இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான அப்பளம் பொரியல் ரெடி..!

More News >>