அவெஞ்சர்ஸ் தீம் மியூசிக்கையே ஆட்டைய போட்ட ஜாம்பி டீம்!
பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகர், யோகிபாபு மற்றும் யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜாம்பி படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.
புவன் நல்லன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த காமெடி ஜாம்பி திரைப்பட டிரைலரில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் அட்டகாசமான தீம் மியூசிக்கை ஆட்டைய போட்டு ரீமீக்ஸ் செய்துள்ளனர். டீசரை பார்த்த ரசிகர்களே கமெண்டுகளில் எண்ட்கேம் தீம் இருப்பதை கண்டுபிடித்துவிட்ட நிலையில், மார்வெல் இந்தியா இதுகுறித்து காப்பிரைட் கிளைம் பண்ணுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டீசரை பொறுத்தவரையில் யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி மட்டும் தான் டாப் நாட்சில் இருக்கிறது. யோகிபாபு காமெடி செய்கிறார். கோபி, சுதாகரின் காமெடி காட்சிகள் டிரைலரில் பெரிதாக இல்லை. அடுத்த மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மிருதன் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஜாம்பி கான்செப்டில் உருவாகி இருக்கும் படம் இதுவாகும்.