ராசன்செல்லப்பா போர்க்கொடி... அதிமுகவில் கோஷ்டி பூசலா? ஓபிஎஸ், இபிஎஸ் கருத்து
மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் எம்எல்ஏவுமான ராசன்செல்லப்பாவின் இன்றைய பேட்டி அதிமுகவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது எனலாம்.
அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்றும்,ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது அதிமுகவில் யாருக்கும் இல்லை எனவும், பொதுக்குழுவை உடனே கூட்டி, கட்சியில் அதிகாரம் படைத்த ஒருவர் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் எனவும் ராசன்செல்லப்பா போர்க்கொடி தூக்கியுள்ளது பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது.
இந்நிலையில் ராசன்செல்லப்பா கூறியது குறித்து சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டதற்கு,கருத்துக் கூற மறுப்பு தெரிவித்து விட்டார்.ராஜன் செல்லப்பாவின் பேட்டியை முழுமையாக பார்த்த பின்பே கருத்து கூற முடியும் எனவும் கூறிய எடப்பாடி பழனிச்சாமி,அதிமுகவில் கோஷ்டி பூசல் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதே போன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்டதற்கு, ராசன் செல்லப்பா என்ன கூறியுள்ளார் என்பது தெரியாது. அவருடைய டிவி பேட்டியை பார்த்த பின்பே எதுவும் கூற முடியும் என்று தெரிவித்துள்ளார்.