குழந்தைகளுடன் உலகக் கோப்பையை கண்டு ரசித்த டோலிவுட் சூப்பர்ஸ்டார்!
டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தனது குழந்தைகளுடன் நேற்று நடந்த உலகக்கோப்பையை நேரில் கண்டு ரசித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் பவர்ஃபுல் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்து அணியை அபார வெற்றி பெறச் செய்தனர்.
இங்கிலாந்தின் ஓவல் ஸ்டேடியத்தில் தனது குழந்தைகளுடன் டோலிவுட் ஸ்டார் மகேஷ் பாபு நேற்று நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டியை கண்டு ரசித்தனர்.
தனது சமூக வலைதள பக்கத்தில் மகேஷ் பாபு பதிவிட்ட புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இவரை போலவே, நேற்றைய போட்டியை இசையமைப்பாளர் அனிருத்தும் கண்டு ரசித்தார். அவரும் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.