குச்சி ஐஸ் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி!
பரணி நடிக்கும் குச்சி ஐஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
வளரும் கலைஞர்களுக்கு உதவியாய் இருப்பதில் விஜய் சேதுபதி முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். நாடோடிகள் புகழ் பரணி நடிக்கும் குச்சி ஐஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பரணி, பிக்பாஸ் முதல் சீசனில் சுவர் ஏறி குதித்து தப்பித்து தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார். பிக்பாஸ் புகழ் வெளிச்சத்தின் மூலம் குச்சி ஐஸ் படத்தின் நாயகனாக பரணி மாறியுள்ளார். ஜெயபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
குச்சி ஐஸ் என்றதும் எதோ பழைய நினைவுகள் குறித்த படமாக இருக்கும் என்று எதிர்பார்த்தால், அதன் ஃபர்ஸ்ட் லுக்கில் குச்சி ஐஸ் மேல் பாகம் பூமியாகவும், கீழ் பாகம் வெப்பத்தால் சீக்கிரம் உருகி வருவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது மிகவும் அருமையாக உள்ளது.மேலும், என் உணவு, என் உரிமை என்று ஃபர்ஸ்ட் லுக்கின் கீழ் உள்ள வாசகங்கள் உணவு கலப்படத்தை குறிப்பதாக அமைந்துள்ளதால், படம் விவசாயத்தை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ளதா என்றும் எண்ணத் தோன்றுகிறது.