மார்க்கெட் காலி இயக்குநராகும் இளம் ஹீரோயின்
தென்னிந்திய நடிகை அனுபமா பரமேஸ்வரன், நடிப்பை விட்டுவிட்டு இயக்குநராவாதில் அதிக ஈடுபாடு கொண்டவராய் மாறியுள்ளார்.
பிரேமம் படத்தில் தேன் மிட்டாய் பார்த்து எச்சில் ஊறும் நாயகியாக ஸ்கூல் உடையில் பஃப் என்று இருக்கும் கூந்தலால் அனைவரையும் ஈர்த்தவர் இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தை தொடர்ந்து தமிழில், நடிகர் தனுஷுடன் இவர் நடித்த கொடி படத்தின் மூலம் தமிழக ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.
ஆனால், பிரேமம் படத்தில் கிடைத்த மார்க்கெட் சாய் பல்லவிக்கு மட்டுமே பெரிதாக கை கொடுக்க தமிழ் மற்றும் மலையாள படங்களில் அனுபமா பரமேஸ்வரனுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின.
இந்நிலையில், நடிப்பை ஏறக்கட்டிவிட்டு, இயக்குநராகும் முயற்சியில் களமிறங்கியுள்ளார் அனுபமா.
இதன் முதற்கட்ட முயற்சியாக துல்கர் சல்மான் தயாரிக்கும் மலையாள படமொன்றில் உதவி இயக்குநராக வேலை பார்த்து வருகிறார் அனுபமா. விரைவில் மலையாளத்தில் தனது முதல் படத்தை இயக்கவும் முடிவு செய்துள்ளார்.