கந்துவா சிறுமி கொலை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு

கந்துவா சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

கடந்த 2018 ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி, காஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது முஸ்லிம் பழங்குடியின சிறுமி கடத்தப்பட்டார். கடத்தியவர்கள் அவளை அங்குள்ள கோயில் வளாகத்திற்குள் அடைத்து வைத்து 4 நாட்களாக பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்தனர். ஒரு வாரம் கழித்து 17 ம் தேதியன்று சிறுமியின் உடல் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம், தொடர்பாக நாடு முழுவதும் கடும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன. பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த வழக்கில் கோயிலின் நிர்வாகியும், முக்கிய குற்றவாளியுமான சஞ்சி ராம், அவரது மகன் விஷால் மற்றும் அவனது நண்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்து திசை திருப்பியதாக சிறப்பு போலீஸ் அதிகாரிகள் தீபக் கஜூரியா மற்றும் சுரேந்தர் வர்மா ஆகியோரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், தடயங்களை அழிக்க முயன்றதாக தலைமை காவலர் திலக்ராஜ், உதவி ஆய்வாளர் ஆனந்த் தத்தா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், மாவட்ட செஷன்ஸ் நீதிபதி தேஜ்விந்தர் சிங் இன்று அளித்த தீர்ப்பில் சிறுவன் விஷாலைத் தவிர 6 பேரை குற்றவாளிகள் என கூறியுள்ளார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.

More News >>