சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து: போக்குவரத்து பாதிப்பு

போபால்: மத்திய பிரதேசம், சத்னா பகுதியில் திடீரென சரக்கு ரயிலின் 24 பெட்டிகள் தடம் புரண்டது. இதனால், அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் சத்னா மற்றும் ரேவா ரயில் பாதையில் நேற்று இரவு சரக்கு ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது, திடீரென சரக்கு ரயிலின் 24 பெட்கள் தடம் புரண்டு கீழே இறங்கின. உடனடியாக ரயிலை நிறுத்திய ஓட்டுனர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும், சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைத்தும் வருகின்றனர்.

இதன் எதிரொலியாக, மும்பை & ஹவுரா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

More News >>