உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி - தவான் திடீர் விலகல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் விலக நேர்ந்துள்ளது இந்திய அணிக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி செய்தியாசியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் கைவி?லில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷிகர் தவான் 3 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் போட்டியில் இருந்து விலக நேர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் கடந்த 9-ந் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சவாலான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு ஓபனிங் பேட்ஸ்மேனான ஷிகர் தவானின் அதிரடி ஆட்டமும் ஒரு காரணம். 107 பந்துகளில் 119 ரன்கள் விளாசிய தவான், ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்தப் போட்டியில் பேட்டிங் செய்த போது தவானுக்கு விரலில் காயம் பட்டது. இதனால் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது தவான் பீல்டிங் செய்யவில்லை.

விரல் காயத்தின் தன்மை குறித்து மருத்துவர்கள் இன்று எக்ஸ்ரே எடுத்து சோதித்ததில் பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனால் 3 வாரங்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி விட, போட்டிகளிலிருந்து தவான் விலக நேர்ந்துள்ளது. இதனால் இன்னும் 7 லீக் ஆட்டங்கள் பாக்கி உள்ள நிலையில் தவான் வெளியேறுகிறார். 3 வாரங்களுக்கு பின் காயம் குணமாகும் பட்சத்தில், அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றால் தவான் விளையாடலாம் என்று தெரிகிறது.

இதனால் தற்போது தவானுக்கு பதில் ரிஷப் பாண்ட் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர்களில் ஒருவர் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்ட ஷிகர் தவான் தொடரில் இருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

More News >>